கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பொங்கல் முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ அலுவலர் ஸ்ரீபால், கார்டு ரூபி கிறிஸ்டி, திருப்பத்தூர் ஸ்ரீதர், ஆண்கள் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கணேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கினார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு புத்தாடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வருவதாக ஆசிரியர் கணேசன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் லாவண்யா,தனலட்சுமி, பானு, பத்மா, அம்மன் பழனி, சாந்தி, திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மாஸ்க் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது. முன்னதாக கல்பனா வரவேற்றார். இறுதியாக நாகமணி நன்றி கூறினார்.
.gif)
