முன்னாள் தமிழக முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்த நாளையொட்டி பென்னாகரம் அருகே செங்கனூர் ஊராட்சி ஐங்கமைனூரில் அதிமுக கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதில் செங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் முன்னாள் தலைவர் மணியம்மாள் முனிராஜ் நாகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் இராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கிளை செயலாளர் லக்ஷ்மி காந்தன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், மாற்று கட்சியில் இருந்து விலகி முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
.gif)
