மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID SMART CARD வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுதப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அட்டைகள் (UDID SMART CARD) வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் நலத்திட்ட உதவிகள்
பெறுவதற்கு UDID SMART CARD கட்டாயமாக்கப்படவுள்ளது.எனவே இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID SMART CARD பெறுவதற்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மற்றும் விண்ணப்பித்தும் பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் 04.12.2021 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கீழ் காணும் ஆவனங்களை தவறாமல் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
UDID SMART CARD பெறுவதற்கு தேவைப்படும் சான்றுகள் மருத்தவ சான்றுயுடன் (அனைத்து பக்கங்களும்)
- தேசிய அடையாள அட்டையின் நகல்
- ஆதார் அட்டை நகல்
- மாற்றுத்திறனாளியின் பாஸ்போட் அளவு புகைப்படம்
- துண்டு சீட்டில் மாற்றுத்திறனாளிகள் கையொப்பம் / கைரேகை
மேற்காணும் ஆவனங்களை சமர்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID SMART CARD) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த இறுதி வாய்பினை பயன்படுத்தி UDID SMART CARD பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.