Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அமைப்புசார தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.83.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமானம், அமைப்புச்சாரா மற்றும் ஓட்டுநர் நலவாரியங்களின் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 4472 உறுப்பினர்களுக்கு ரூ.83.37 இலட்சம் மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண நிதியுதவி, கல்வி, மற்றும் திருமணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்பதர்சினி, இஆப.., அவர்கள் 5 பயனாளிகளுக்கு இன்று (01.12.2021) வழங்கினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (01.12.2021) வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 1516 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.33,63,950/-மும், 2,512 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.25,12,000/-மும், 16 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.62,000/-மும், இயற்கை மரணமடைந்த 68 நலவாரிய உறுப்பனர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.16,35,000/-மும், 12 பயனாளிகளுக்கு கண்கண்ணாடி வாங்க நிதியுதவியாக ரூ.6000/-மும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 175 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.3,95,000/-
மும், 124 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.1,24,000/-மும், இயற்கை மரணமடைந்த 5 நலவாரிய உறுப்பனர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.1,17,000/-மும், ஓட்டுநர்கள் நல வாரியத்தின் மூலம் 28 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.82,000/- மும், 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.15,000/-மும், இயற்கை மரணமடைந்த ஒரு நலவாரிய உறுப்பனரின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.25,000/-மும் என தருமபுரி மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புச்சாரா மற்றும் ஓட்டுநர் நலவாரியங்களின் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 4472 உறுப்பினர்களுக்கு ரூ.83,36,950/- மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண நிதியுதவி, கல்வி, மற்றும் திருமணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப... அவர்கள் 5 பயனாளிகளுக்கு இன்று (01.12.2021) வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (கூடுதல் பொறுப்பு) திருமதி. கே.பி. இந்தியா அவர்கள் உடனிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884