Type Here to Get Search Results !

வேளாண் விற்பனை மற்றும் வனிகத்துறையின் 9 கடைகள் வாடகைக்கு விடப்படும்.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தருமபுரி விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், தீர்த்தகிரி நகர், M.G. ரோடு, பாலக்கோடு-636808 முகவரியில் கட்டுப்பட்டுள்ள 9 கடைகள் (ஒரு கடையின் பரப்பு 6X4.5 சதுர மீட்டரி) காய்கள், பழங்கள் மற்றும் வேளாண் விலை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் ஆர்வலர் குழு மற்றும் விவசாயிகளுக்கு கடைகள் 11 மாதங்களுக்கு வாடகைக்கு விட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் ஆர்வலர் குழு, விவசாயிகளை தேர்வு செய்து கடைகள் வாடகை விட அனுமதிக்கப்படும்.

மேலும் விண்ணப்பங்களை செயலாளர்,
தருமபுரி விற்பனைக்குழு, மதிகோன்பாளையம், திருப்பத்தூர் மெயின் ரோடு, தருமபுரி- 636702 அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்காணும் முகவரிக்கு 08.12.2021-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies