இந்தியா முழுவதும் பிஏசிஎல் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் கோடி பெற்றது, கடந்த 8 ஆண்டுகளாக நிறுவனம் மூடப்பட்டு வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு இன்று வரை அந்த பணம் மக்களிடையே வந்து சேரவில்லை.
இதனால் பல லட்சம் பிஏசிஎல் ஏஜென்ட்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி உள்ளனர், ஆகையால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்துக்கு வர வேண்டிய பத்தாயிரம் கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது துவங்கி நடைபெற்று உள்ளது.
அதில் தமிழக எம்பிக்கள் பிஏசிஎல் இந்தியா லிமிடெட் பணத்தை பெற்றுத் தர அவையிலே முழக்கங்களை எழுப்பி பிரதமர் கவனத்திற்கு இதை சென்றடைய செய்ய வேண்டுமென ஒட்டுமொத்த பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் சார்பாக உலக பசுமை பாதுகாப்பு கட்சி கேட்டுக்கொள்கின்றது என அதன் தலைவர் பசுமை ஸ்ரீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.