தருமபுரி சோகத்தூர் பகுதியில், இயங்கி வரும் தொன் போஸ்கோ கல்லூரியில், முதுநிலை இயற்பியல் முதலாமாண்டில் பயிலும், மாணவர் செல்வரங்கன் அவர்கள் அகில இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் கோவையில் நடைபெற்ற தேசியக் கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
முறையே பளு தூக்குதல் 130 பிரிவில் தங்கமும், ஆடவர் 100 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளியும், டேக்வாண்டோ 64 கிலோ பிரிவில் வெண்கலமும் பெற்றுள்ளார். வெற்றிப் பெற்ற மாணவரைக் கல்லூரி முதல்வர் அருள்திரு. ஆ. சிலுவைமுத்து அவர்களும், உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பாராட்டினர்.