தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோடியூரை சேர்ந்த சிவகுமார் இவரது மனைவி ரஞ்சனி இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது மகன் நவீன்,16 பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11, ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று பாலக்கோட்டிலிருந்து வெள்ளிசந்தை நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பூ ஏற்றி சென்ற வேன் மாணவன் மீது மோதி உள்ளது.
இதில் படுகாயமடைந்த நவீன் அரசு மருத்துவமவையில் சிகிச்சைபெற்று மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமயைில் சிகிச்சைகாக அனுமதித்துள்னர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். இதனைய அறிந்த மாணவன் நவீனுடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்குள் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டி நேற்று அவரது தயாரை அழைத்து தலைமை ஆசிரியர் லட்சுமணன், 50 ஆயிரத்து, 15 ரூபாயை வழங்கினார்.