தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், தொட்டம்பட்டி பஞ்சாயத்தில் 165 ஏக்கரில் அமைந்துள்ள பெரிய ஏரி தண்ணீர் நிரம்பி உபரி நீர் அரூர் நகரின் வழியாக ராஜகால்வாயில் பாய்ந்தோடி வாணியாற்றில் கலக்கும் பொது. நகரின் அனைத்து சாக்கடை கழிவுநீரும் அடித்துச் செல்லப்பட்டு கொசு உற்பத்தியை குறைக்கும் வகையில் நீலம் 2.4 கி.மீ, 4 மீட்டர் அகலத்தில் அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. ஒருமுறை ஏரி நிரம்பினால் 3 ஆண்டுக்கு குடிநீர் பிரச்சனை தீரும்.
ராஜகால்வாய் ஆக்கிரமிப்பால் தொடர் மழையின் போது நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது என புகார் எழுந்தது. சில தினங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் முதல் கட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற அளவிடும் பணி நடைபெற்று முடிந்தது. நேற்று இரண்டாம் கட்டமாக பெரிய ஏரியில் இருந்து கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கிய போது விவசாயிகள், அதிகாரிகளிடம் அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் ராஜகால்வாய் அகலத்தைப் குறைத்து தனி நபர்கள் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றிய பின்னர் விவசாய நிலப் பகுதியில் அளவீடு செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.