இக்கூட்டத்தில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தருமபுரி கோட்ட ஆய அலுவலகம், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், தருமபுரி சார் ஆட்சியர் அலுவலகம், அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உதவி கருவூல அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகம், வட்டார் கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மருத்துவ ஊரக பணிகள் இணை இயக்குநரகம், சுகாதார பணிகள் துணை இயக்குநரகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சேலம் மத்திய சிறைச்சாலை, அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், சத்துணவு பிரிவு அலுவலகம், கூட்டுறவு சர்க்கரை ஆலை, காவல் ஆணையர் அலுவலகம், பட்டு வளர்ச்சி துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வங்கிகள், வேளாண்மைத்துறை.
சென்னை ஓய்வூதிய இயக்குநரகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஏற்கனவே வரப்பெற்ற 59 மனுக்களுக்கு உரிய துறைகளிடமிருந்து பதில்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 மனுக்கள் வரப்பெற்று, சம்மபந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது துறை அலுவலர்கள் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவும், உரிய தீர்வுகள் கிடைக்கவும் துரித நடவடிக்ககைள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில், சென்னை நிதித்துறை ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.நாராயணன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. முத்தையன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.சி.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) (பொறுப்பு) திருமதி. வளர்மதி, உதவி இயக்குநர் ஊராட்சி திரு. சீனிவாச சேகர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் சங்க பிரதிநிதகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.