நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது மற்றொருவர் தலைமறைவு. - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி இணையதளம்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, December 8, 2021

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது மற்றொருவர் தலைமறைவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே தனிப்படை போலீசார் பாகலூர் & பேரிகை சாலையில் கொளதாசபுரம் பிரிவு சாலையில வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் விரட்டி சென்ற நிலையில் ஒருவர் பிடிபட்டார்.

அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மஞ்சுநாத் ( 40), பெரிய முத்தாலி அருகே உள்ள காரப்பள்ளியை சேர்ந்தவர் என்றும், அவர் அனுமதியின்றி ஒரு நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய  செம்பட்டியை சேர்ந்த நாராயணப்பா என்பவரை பாகலூர் போலீசார் தேடி வருகிறார்கள். 

No comments:

Post Top Ad