அரசின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 டிசம்பர், 2021

அரசின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் 272 குடியிருப்புகள், தருமபுரி வட்டம், கொன்டஹரள்ளி திட்டப்பகுதியில் 280 குடியிருப்புகள், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் 608 குடியிருப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையனூர் திட்டப்பகுதியில் 192 குடியிருப்புகள், நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் 420 குடியிருப்புகள் மற்றும் அரூர் பேரூராட்சி பகுதியில் அம்பேத்கார் காலனி திட்டப்பகுதியில் 912 குடியிருப்புகள் மற்றும் பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதியில் 504 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தோவுசெய்யப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிகளுக்கு அருகில் வசித்து வரும் பொதுமக்கள், குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தலைவரின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டங்களுக்கான வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் பயனாளி பங்கீட்டு தொகை ரூ 1.30 இலட்சம் முதல் ரூ.1.52 இலட்சம் வரை வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்றும், தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 18.12.2021 சனிக்கிழமை அன்றும், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21.12.2021 செவ்வாய்க்கிழமை அன்றும், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.12.2021 புதன்கிழமை அன்றும் மேற்குறிப்பிட்ட நாட்களில் நாள்தோறும்காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்றது. 

குறிப்பிட்ட திட்டப்பகுதிகளில் ஆதி திராவிட இன மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.