மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி. காமராஜ் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக மேலாளர் ரா.கணேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர்கள் முனைவர் சி.தமிழரசு, முனைவர் அ.இம்தியாஸ் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஆர்.பி.எஸ்.கே குழுவின் மருத்துவ அலுவலர் ப.கங்காதரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பகுதி நேர சுகாதார செவிலியர் ஜே.சுமதி , கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.