தேசத்தின் எல்லையை காக்கும் பணியில் இருந்த போது பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரைச்சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் என்பவரின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலியும், அவரதுமணி மண்டப திறப்பு விழாவும் கும்மனூரில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி திருமதி.கிருஷ்ணவேணி கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ஓசூர் மாநகர பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சத்யா தலைமையில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில விவசாய அணி துணை செயலாளர் மதியழகன் அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.