கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடப்புரம் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் கழிவு நீர் திட்டப்பணிகள் , நீர்தேக்க கால்வாய் மற்றும் தூய்மை பணிகள் மற்றும் 100நாள் வேலை திட்டத்தின் மேலும் செயல்பட்டு வரும் பணிகள் குறித்து இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா , ஊராட்சி செயலாளர் வேல்முருகன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , வார்டு உறுப்பினர் கஜேந்திரன் 100 நாள் வேலையாட்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.