பின்னர் கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஓரிரு வாரங்களில் சமையல் அறைகள் பழுது நீக்கம் செய்து சரிசெய்து தரப்படும் என்று தலைமை ஆசிரியர்களிடம் சேர்மன் அவர்கள் உறுதியளித்தனர்.
அதனடிப்படையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் உள்ள கிராமங்களான பத்தலபள்ளி, ஆலுசோனை மேலுமலை பி.ஜி.துர்கம், பீர்ப்பள்ளி,எர்ரண்டப்பள்ளி,பெரியபேட்டிகானபள்ளி, மைதாண்டபள்ளி, வேம்பள்ளி, பொன்னல்நத்தம், ஆருப்பள்ளி, நீலவங்கா, சிம்பில் திராடி, பி.குருபரப்பள்ளி, பங்காநத்தம், ஒசஹள்ளி, காமன்தொட்டி, டி.கொத்தப்பள்ளி, அனுமந்தபுரம், உலகம் ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளிலுள்ள சமையற் கூடம் சீரமைக்க ஒன்றிய பொது நிதியிலிருந்து சுமார்.ரூ.11,06000, இலட்சம் மதிப்பீட்டில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் திருமதி. லாவண்யா, ஹேம்நாத் அவர்கள் ஆலுசோனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியிலுள்ள சமையல் அறை புனரமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,சத்துணவு அமைப்பாளர்கள்,சமையலர்கள் ஆகியோர் சேர்மன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வட்டார வளர்சி அலுவலர் சிவகுமார், சுப்பிரமணி பொறியாளர் தீபாமணி, ஆஞ்சப்பா லட்சுமேகௌடு, ஊராட்சி மன்ற து.தலைவர் ஶ்ரீகிருஷ்ணா, மாதேஷ், கணேஷ் ,வெங்கடேஷ், பச்சப்பா, பட்லப்பா, தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.