கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாள் தின கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி நம் நாட்டு எல்லைகளைப் பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களை பாராட்டவும், போரிலும், போர் தொடர்பான நடவடிக்கைகளிலும் இன்னுயிர் இழந்த தியாகிகளையும், விழுப்புண் பெற்ற வீரர்களையும் நெஞ்சார நினைவு கூறும் வகையிலும் கொடிநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி உண்டியல் மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது.
இவ்வாறு திரட்டப்படும் நிதியானது போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தைச் சார்ந்தோரின் நலன் பேணப் பயன்படுத்தப்படுகிறது. உண்டியல் மூலம் வசூல் தொடங்கி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நம் நாட்டைக் காத்த முப்படை வீரர்களின் நலன் கருதி தாராளமாக நன்கொடையளித்து உதவ வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.