தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள், போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள், போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் மது விலக்கு ஆயத்தீர்வு துறையின் தருமபுரி மாவட்ட
ஆயத்தீர்வை பிரிவின் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி. இஆப., அவர்கள் இன்று (01.12.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி இலக்கியம் பட்டி வரை சென்றடைந்தது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 3 இடங்கள் வீதம் மொத்தம் 30 இடங்களில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள்,
போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன் இஆப, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாச்சலம், துணை காவல் கண்காணிப்பாளர் (மது விலக்கு மற்றும் அமல் பிரிவு) திரு.இராஜ சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு.நாரயணன், வட்டாட்சியர்கள் திரு.இராஜராஜன், திரு.ரமேஷ், திருமதி.கலைச்செல்வி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.