தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தைமு ன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (01.12.2021) நடைபெற்றது.
உலக மக்களிடம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு, இந்த ஆண்டும் "எச்.ஐ.வி! எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம்.எச்.ஐ.வி! எய்ட்ஸ் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக்கு. முடிவு கட்டுவோம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன்படி தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு
மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியான, 'எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன்.
அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன், புதிய எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்கிடுவேன். தன்னார்வமாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள முன் வருவேன்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன். அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன் என உளமார உறுதி அளிக்கிறேன்." என்ற உறுதிமொழி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள் வாசிக்க அனைத்து அலுவலர்கள், மாணவியர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உட்பட பலர் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன் இஆப., துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.சௌவுண்டம்மாள், துணை இயக்குநர் காசநோய் மரு.ராஜ்குமார், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பு மருத்துவர்
மரு.சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் மரு.காந்தி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மரு.பிருந்தா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.