காரிமங்கலம் அருகே உள்ள ஆலமொரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் ரமேஷ் (வயது 25). இவர் அங்குள்ள தனியார் பால் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக அனுமந்தபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் மோட்டார் சைக்கிளுடன் ரமேஷ் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.