தருமபுரி மாவட்டம் அரூர், அதியமான்கோட்டை, தொப்பூர், ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றபோது குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது, நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் ரங்கசாமி, காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், ஆனந்தராஜ் மற்றும் தலைமை காவலர் வேலாயுதம் காவலர்கள் சேதுபதி, ஜெகன், குமரவேல் ஆகியோரை பாராட்டி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் உடன் இருந்தார்.