அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் தெற்கு ஒன்றியம் மற்றும் பென்னாகரம் பேரூர் பகுதிகளுக்கான அமைப்பு தேர்தல் இன்றும் நாளையும் நடைப்பெறுகிறது.
தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன், அதிமுக விவசாய பிரிவு தலைவர், தர்மபுரி மாவட்ட பால்வள கூட்டுறவு சங்க தலைவர் டிஆர் அன்பழகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே சி அன்பு அவர்களின் தலைமையில் இன்றும் மற்றும் நாளையும் காலை 10 மணி முதல் 5 மணி வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளை கழக பொறுப்பாளர்களின் தேர்வுக்கு தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது.
எனவே அது சமயம் அனைத்து கிளைக் அதிமுக நிர்வாகிகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தனது வேட்பு மனுத்தாக்கல் எண்ணை பதிவு செய்யுமாறு ஒன்றிய அதிமுக சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது, இடம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபம் பென்னாகரம்.