கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடத்தூர் கிளை நூலகம் - தகடூர் குரல் சார்பில் நூல் மதிப்புரைப் போட்டி, நூல் அறிமுகப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் மா.மாதன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட நூலக ஆய்வாளர் சு.சந்திரசேகரன் மாணவர்களிடையே பேசும்போது நூலகப் பயன்பாடு பற்றி பேசினார். தகடூர் குரல் ஆசிரியர் ஆ.வினோத்குமார் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்தார். முன்னதாக ஆசிரியை செந்தாமரை வரவேற்புரை வழங்கினார். முடிவில் நூலகர் சி.சரவணன் நன்றி கூறினார்.
Tags
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.