தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திர்க்குட்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கூடு தொண்டு நிறுவனம் சார்பாக ஊரட்சிகளில் HIV/AIDS மற்றும் பல்வினை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து (Advocacy meeting) ஆதரித்து வழக்காடுதல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.அசோக். ஆலோசகர் ICTC பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை அவர்கள் கலந்துகொண்டார். திரு.K. அமரவேல் BDO (VP) மற்றும் திரு.R.அருள்மொழிதேவன் BDO (BP) ஆகியோர் கலந்துக்கொண்டு தலைமை தாங்கினார்.
திரு.M.சுப்ரமணி மாவட்ட வள அலுவலர், கூடு இணைப்பு பணியாளர் திட்டம், அவர்கள் திட்டம் சார்ந்த விளக்கங்களை பகிர்ந்துகொண்டார். அதனை தொடர்ந்து கூடு இணைப்பு பணியாளர் திட்டம் சார்பாக உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருமதி.K.பழனியம்மாள் மண்டல மேற்பார்வையாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இணைப்பு பணியாளர்கள் திரு. ஜெயநீதி, திரு. அபுதாகீர், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தை சார்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.