தர்மபுரி மாவட்டம், அரூர் கோர்ட்டு வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா, நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, வழக்கு தொடர்பாக கோர்ட்டின் நடவடிக்கைகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
அரூரில் விழிப்புணர்வு வேனை சப் கோர்ட் நீதிபதி முகமது அன்சாரி பிரச்சாரம் வேனை கொடியசைத்து துவக்கினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி விஸ்வநாதன் வழங்கினார். அந்த வேனில் ஒலிபெருக்கி மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அரூர் நகர், பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்பட 30}க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசார சென்றது. நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் சரவணன், பொதிகைவேந்தன், சேகர், பெருமாள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.