இம்முகாமிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.வே.சம்பத்குமார் (அரூர்), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்ச்சி முடித்தவர்களுக்கு சன்றிதழ்களையும் வழங்கி பேசும் போது தெரிவித்தாவது:-
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து இளைஞர்களுக்கு வழிகாட்டப்பட்டதோடு, இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் பல்வேறு பேட்டி தேர்வுகளுக்கும் தொடர்ந்து தங்களை தயார்படுத்திக்கொண்டே இருந்தால் சிறந்த பணிகளை பெறுவதற்கான நல்வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி. ஆப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முகாமில் சுமார் 3200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனார். இதில் Toyota, TVS, Tata Electricals, Bosh உள்ளிட்ட 102-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கு தேர்வு செய்த 1144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விதமாக 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்ச்சி முடித்த 27 நபர்களுக்கு சன்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் துறை அலுவலர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. இரா.வைத்திநாதன், இஆப., வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் திருமதி.லதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) திரு.பாபு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் திருமதி.மகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் .பி.சுப்பிரமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வி.தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.அசோகன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் கிள்ளிவளவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். திருமதி.செண்பகவள்ளி, இந்நாள் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.