Type Here to Get Search Results !

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை -2021 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் தலைமையில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை -2021 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் தலைமையில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சதிவ்யதர்சினி , இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.11.2021) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் பேசும் போது தெரிவித்தாவது: தருமபுரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட வேளாண் சார்ந்த துறைகள் மழைக்காலங்களில் வேளாண் பயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுக்கு உரிய விளக்கங்களை அளித்திட வேண்டும்.

வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மழைக்காலங்களில் நிரம்பும் பொழுது அதன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு முன் பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும் தண்டோரா, ஒலிப்பெருக்கி போன்றவற்றின் வாயிலாக முன்கூட்டியே தெரியப்படுத்துவதோடு அருகில் உள்ள பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளநீர் வெளியேறுவதை தடுப்புதற்கு ஏதுவாக மண், மணல், மணல் பைகள் போன்றவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். 

மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் நீரினை வெளியேற்றுவதற்கும் தேவையான ஜேசிபி
இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஊரக மேலும், மழைக்காலங்களில் மழை வெள்ள நீரால் பாதிப்புக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு தேவையான முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதன்மை செயலாளர்/ தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். 

பின்னர், தருமபுரி மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி eSHRAM / NDUW portal திட்டத்தில் 10 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 15 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளும், 5 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையினையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள வாணியாறு அணை மற்றும் காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி தடுப்பணை அணைக்கட்டு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அணையின் நீரின் அளவு, உபரி நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். 

வெள்ள உபரி நீரை வெளியேற்றுவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இந்த ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு. அனிதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன், இஆப, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன், இஆப, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு முத்தையன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு நாராயணன், நீர்வள ஆதாரத்துறை, மேல்பெண்ணையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் திரு.எஸ்.குமார், உதவி பொறியாளர்கள் திரு.பிரபு, திருமதி.பரிமளா, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திரு.சுப்பிரமணி, காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.சின்னா, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி கே.பி. இந்தியா ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884