இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் சங்கர் தலைமை தாங்கினார் விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன் வரவேற்றார் இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது கனமழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை தர்மபுரி மாவட்ட நல வாழ்வு கூர்நோக்ககம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.
மாவட்டத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள் மழையின் காரணமாக மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து வருகின்ற நிலையிலுள்ள (பழுதடைந்த நிலையில் உள்ள) அங்கன்வாடி கட்டிடங்களை பழுது நீக்கியும், முறையான குடிநீர், கழிப்பறை, சாக்கடை வசதிகளை கிராம ஊராட்சி சார்பில் செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, திருவள்ளுவர் அறக்கட்டளை இயக்குனர் வேல்விழி சிற்பி தொண்டு நிறுவன இயக்குநர் கமலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.