Type Here to Get Search Results !

டெங்கு நோய் பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிகரமாகனபள்ளி ஊராட்சியில் உள்ள மூன்று கிராமங்களில் மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து தற்போது துர்நாற்றம் வீசி கொசு பரவி டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரமாகனபள்ளி ஊராட்சியில் கொங்கனப்பள்ளி, கே கொத்தூர் தோட்டகனவாய் கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் இந்த கிராமங்கள் தமிழகத்தின் எல்லையில் உள்ள மலையோர கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களாக மழையால் ஊர் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் தெருக்களில் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இதனால் தெருக்களில் ஆங்காங்கே சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி பாசி படர்ந்து கொசு பரவி  வருகிறது. 

இந்த சாலைகளிலே கிராம மக்களும் நடந்து சென்று மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் வாழும் கிராம மக்கள்  வழியின்றி சேரும் சகதியில் வாழ்ந்து வருகின்றனர். சாலை ஓரங்களிலும் வீடுகளின் அருகில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் நீரில் தற்போது கொசு உற்பத்தியாகி டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த தெருகளில் சிறுவர்களும் கால்நடைகளும் சென்று விளையாடி வருகின்றனர். தொடர்மழையாலும் சாக்கடை கழிவு நீராலும் அப்பகுதியில் தற்போது நோய் தோற்று ஏற்பட்டு நோய் வாய் பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிராம மக்களிடம் அலட்சியம் காட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக இந்த சாக்கடை சேறும் சகதியுமான சாலையை சீரமைத்து டெங்கு நோய் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies