திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் தீபத்திருவிழா 07.11.2021 முதல் 23.11.2021 வரை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 17.11.2021 பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021 முடிய அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்திற்குள் பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்/ பக்தர்கள் மேற்காணும் நாட்களில் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு செல்வதை தவிரக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)
