இந்திய அரசு தேசிய வளர்ச்சி பணிகளில் சிறந்து விளங்கும் ஆண், பெண், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விருது வழங்கி வருகிறது.
இளைஞர் மேம்பாட்டு பணிகள், சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், கலாச்சாரம், மனித உரிமைகள், கலை மற்றும் இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், குடியுரிமை, சமுக சேவை, விளையாட்டு மற்றும் கல்வித்திறன் ஆகிய இனங்களில் சிறந்து விளங்கும் ஆண், பெண், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் விருது வழங்கபடுகிறது.
தற்போது 2019-20 ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 17.11.2021-க்குள் https://innovate.mygov.in/national-youth-award-2020 என்ற இணைய தள முகவரி வாயிலாக மட்டுமே சமர்பிக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கபடும்.
மேலும் விருதுகள் தொடர்பான விவரங்களும் மேற்காணும் இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள ஆண், பெண் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள இணைய தள முகவரி வாயிலாக தேசிய இளைஞர் விருதிற்கு 17.11.2021-க்குள் விண்ணப்பிக்கலாம்.