Type Here to Get Search Results !

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் சிறப்பு (Special Campaign Days) முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் சிறப்பு (Special Campaign Days) முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட சாலை விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை சாலையில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்கச்சாவடி மையங்களில் இன்று (13.11.2021) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் சிறப்பு (Special Campaign Days) முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி ஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவ்வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் சிறப்பு (Special Campaign Days) முகாமில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட படிவங்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுமெனவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் சிறப்பு (Special Campaign Days) முகாமினை சிறப்பாக நடத்திட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் முனைப்புடன் பணியற்றிட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வருகின்ற 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 

இதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகள் கடந்த 01.11.2021 தொடங்கி வருகின்ற 20.12.2021 வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 860 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1479 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2022 பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.

 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைய உள்ளவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்காதவர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்க படிவம் 6-ல் விவரங்களை பூர்த்திசெய்து
உரிய ஆவணங்களோடு அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது இணையதளம் (www.nvsp.in/Voter Help line mobile app) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் இன்றைய (13.11.2021) தினம் மற்றும் நாளை 14.11.2021, ஞாயிற்றுக்கிழமை, வருகின்ற 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய 4 நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்.


மேலும் 24X7 செயல்பட்டுவரும் கட்டணமில்லா தொடர்பு எண் 1077 மற்றும் 1950 வாயிலாகவும் வாக்காளர்கள் தங்களது புகார்கள்/தகவல்களை தெரிவிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று ஒருவர் இடம் பெயர்ந்து இருந்தாலோ, இறந்து போயிருந்தாலோ படிவம் 7-லும், பதிவில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனில படிவம் 8-லும், முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் படிவம் 8ஏ- விலும் விண்ணப்பிக்கலாம். 

எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு இணைத்து விண்ணபிக்கலாம் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவும் விண்ணபிக்கலாம்.

இந்த ஆய்வின் போது தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார்
உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருத்தனார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884