தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மாட்லாம்பட்டியில் இயங்கி வரும் கிளை நூலகம் மிகவும் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது. இந்த பிரச்சனை கடந்த மூன்று ஆண்டுகளாகவே உள்ளது, தற்போது பெய்த கனமழையால் மிக பலத்த சேதம் அடைந்துள்ளது.
மழைநீர் நூலகத்தின் உள்ளே புகுவதால் புத்தகங்கள் நனைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்கின்றன, இந்த பழுதடைந்த நூலகத்தின் அருகில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் மேடான பகுதியில் கட்டப்பட்டு இருப்பதால் அங்கே பெய்கின்ற மழைநீர் பள்ளமாக இருக்கும் நூலகத்தின் அருகே வந்து தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுகின்றது.
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளும் இதன் காரணமாக நூலகத்திற்கு வருவதை அறவே தவிக்கின்றனர், அருகில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களை இந்த நூலகம் பயன்படுத்த அனுப்புவதில்லை. இந்த நூலகத்தை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சீரமைத்து கொடுக்க வேண்டும் அப்பகுதி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
.gif)
