தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி அவர்கள், மெயினருவி, பரிசல் மையம் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார். இதனையடுத்து பேசிய அவர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணையை சென்று அங்கிருந்து வீணாக கடலில் கலக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வழியாக காவிரி நீர் சென்றாலும் கூட மாவட்ட மக்களுக்கு பயன்படுவதில்லை. எனவே தருமபுரி மாவட்ட வறட்சி மாவட்டமாக உள்ள நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ராட்சத பைப்லைன் அமைத்து அதன் மூலம் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் இது ஒரு வளர்ச்சி திட்டமாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
தமிழக முதல்வர் அவர்கள் அவர்களிடம் இந்த கோரிக்கையை ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் தமிழக முதல்வர் இந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
.gif)
