கெலவரப்பள்ளி அணையின் உபரி நீர் வரக்கூடிய மருதாண்டப்பள்ளி, வரதாபுரம் உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்ட கே.பி.முனுசாமி துரை எரியிலிருந்து சின்னார் அணைக்கு செல்லக்கூடிய கால்வாய்கள் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முனுசாமி அவர்கள் கால்வாய் செல்லக்கூடிய வழியில் இருந்த பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் பொதுமக்களின் நலனிற்காக 11 அடி அகலத்தில் கால்வாய் அமைக்க அனுமதி பெற்று தந்தார்.
ஏறக்குறைய சூளகிரி பகுதி மக்களின் கனவு நிறைவேற்ற ஆயத்தமாகி உள்ளநிலையில், கொட்டும் மழையிலும் மக்களின் சேவையாற்ற வந்த எம்எல்ஏ கே.பி.முனுசாமி அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். சின்னார் ராமசாமி , ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி , மேற்க்கு ஒன்றிய செயலாளர் பாபு (எ) வெங்கடாசலம் , கேசவ செட்டி , சீனிவாச ஆச்சாரி, கபடி குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.