கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரி, அத்திமுகம், பேரிகை பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டுள்ள நிலையில் சூளகிரியை அடுத்த அத்திமுகம் அருகே வெங்கடேசபுரம் ஊராட்சியில் இருக்கும் அனைத்து கிராமத்தில் வளர்க்கும் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தீவிர கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டம் 2 வது சுற்று முகாம் அமைத்து கால்நடைக்கு மருந்துகள் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி அவர்களிடம் நேரில் தங்களின் குறைகளை கூறினார்கள், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து முகாமிற்கு நேரில் சென்ற வேப்பனப்பள்ளி சட்ட மன்ற உறுப்பினர் கேபிமுனுசாமி உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி கால்நடைகளுக்கு தேவையான அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனைகளில் மாடுகளுக்கு மருந்தினை செலுத்திட ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உடன் இருந்தனர். மேலும் அத்திமுகம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் சூளகிரி கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் பாலு அவர்களும் பாபு அவர்கள் கலந்து கொண்டனர்.