தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி அடுத்த மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பாமகவின் மூத்த முன்னோடி சின்னசாமி அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உழவர் பேரியக்கம் மாநில செயலாளரும் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இல. வேலுசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி செந்தில் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.