நிகழ்வின் சிறப்பு விருந்தினராகவும் மனித வாழ்வின் இன்றைய சூழ்நிலை குறித்து மிக துல்லியமாக மக்களிடம் அவ்வப்போது கொண்டு சேர்க்கும் தருமபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்மவட்ட மாணவர்களின் அறிவு திறன் மேம்பட தொடர்ந்து தகடூர் புத்தக பேரவை மற்றும் இயற்கை சார்ந்த தொடர் பயணங்கள் இளைஞர்கள் ஊக்குவிப்பு என்று பன்முகத்தன்மை கொண்ட மருத்துவர் . செந்தில் அவர்கள் காலநிலை மாற்றம் மக்கள் மேற்கொள்ளவேண்டிய வாழ்வியல் குறித்து மிக தெளிவுடன் எடுத்துரைத்தார் என் மனதை இன்றும் கொள்ளை கொண்டார்.
நிகழ்வின் கதாநாயகனா சங்கர் அவர்கள் வீடுதோறும் மூலிகை பரப்பும் முறை குறித்துதெளிவான முறையில் விளக்கமளித்தார்.
பென்னாகரம் தொகுதியில் தொடர்ந்து பல சமூக வளர்ச்சி , இயற்க்கை , வளர்ச்சி குறித்தான பல்வேறு செயலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆர்வம் காட்டி செயலில் வெற்றி முத்திரை பதித்து வரும் அண்ணன் கென்னடி மகேஷ் அவர்கள் இயற்க்கை மாணவர்கள் குறித்து உரையாற்றினார்
.gif)
