Type Here to Get Search Results !

ஜவகர்லால் நேரு பிறந்த நாள் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதனின் ஸ்தாபன நாள்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு பிறந்த நாள் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதனின் ஸ்தாபன நாள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்புசெட்டி பட்டி கிராமத்தில் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கட்டுரை ஓவியம்  பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நேரு யுவ கேந்திராவின் சார்பில் கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் வேல்முருகன் தேசிய இளைஞர் தொண்டர்கள் அரிபிரசாந்த் முருகன் பாரதி இளைஞர் மன்ற தலைவர் அரிகரன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies