புதுமைகள் மூலம் அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் நவீன சமுதாயத்தில் அதன் தாக்கம் குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
திரு.குணசேகரன் ஆராய்ச்சியாளர் தலைமை தலைமையேற்று, மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் இயற்பியல் துறை பேராசிரியர் திரு செல்வபாண்டியன், பெரியார் பல்கலைக்கழகம் விரிவாக்க மைய இயக்குனர் (பொறுப்பு) மோகனசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டனர், நன்றியுரையை பிரசாந்த் அவர்கள் வழங்கினார். உதவி பேராசிரியர் கோபால் மற்றும் சசிகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் கார்த்திகேயன், கோவிந்தராஜ், அனிதா, கவிதா, காமராஜ், பிரபு மற்றும் மாணவர்கள் சுமார் 150 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.