தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தனது 51-வது வயதில் முகநூலில் முதன்முறையாக இப்போதுதான் அறிமுகமாகிறார். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னரே தந்தை எனும் நிலையை அடைந்தார். 18 ஆண்டுகளாக ஒரு தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பதை இந்த சமூகம் எப்படியெல்லாம் சித்தரித்திருக்கும் அதில் இவர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்து இருப்பார்கள் என்பதை உங்களின் எண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறோம்.
இவர்கள் பெற்றோர் எனும் நிலையை அடைய இன்றைய தொழில் நுட்பத்தை அனைத்தும் முயற்சித்தார்கள் எனினும் எந்த பலனுமில்லை இறுதியில் இவர் நம்பியது இயற்கையை மட்டுமே, இயற்கையில் காணக்கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையும் உண்டு அதன் செயல்வேலைகளை கவனித்தார். இப்படி இருக்கையில் இயற்கை இவருக்கு இன்பம் அளிக்கும் வகையில் குழந்தைப் பேறு கிட்டியது.
இப்படியே ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவத்தை அறிந்த இவர் தன் நிலை எவருக்கும் வரக்கூடாது என எண்ணி இன்று வரை தன்னை நாடி வரும் அனைவருக்கும் இலவசமாகவே ஆலோசனைகள் மற்றும் மூலிகை மருந்துகளை வழங்கி அவர்களை வெற்றி பெறச் செய்தும் அதில் இவர் இன்பம் அடைந்து வருகிறார்.
எனவே இவர் பின்னாளில் இயற்கை விவசாயம் மட்டுமல்லாமல் இயற்கை வைத்தியர் என்றும் அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறார். இயற்கையின் மீது பிரியம் கொண்ட இவருக்கு இயற்கை வரமாக பிறந்த தனது மகனுக்கு இயற்கை பிரியன் எனும் பெயரைச் சூட்டினார், அதன்பிறகு இவர் அடுத்த நிலையை அடைய 5 வருடமாக தொடர்ந்து இன்றுவரை சமைக்காத உணவை மட்டுமே எடுத்து வருகிறார் இவரைப் பார்த்தால் 30 வயதுக்கு மேல் தாண்டியவர் போல் தெரியாது..
சமைக்காத உணவை உண்ணும் மனிதரை இதுவரை நாம் தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறோம், இவர் பக்கத்திலேயே இருப்பது நமக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது, நேரில் அவரை கண்டபோது வியப்பாக இருந்தது அவ்வளவு எளிமையான மனிதர் மற்ற விவசாயி போல் பாரம்பரிய முறையில் சீரகசம்பா நெல், துவரை, அவரை, பச்சைப் பயிர், உளுந்து, கொள்ளு, நிலக்கடலை, வெள்ளை வெங்காயம், நாட்டு தக்காளி மற்றும் பல மூலிகை செடிகள் உணவு பயிர்கள் என அத்தனையும் பராமரிக்கும் ஒரு சாதாரண மண்ணின் மனிதராகக் காணப்பட்டார்.
தன்னிடம் உள்ள அரிய வகை மூலிகைகளும் எல்லோரிடமும் இருக்கவேண்டுமென எண்ணி அறிமுகப்படுத்துகிறார். நாட்டு தக்காளி விதை, பாரம்பரிய சின்ன வெள்ளை வெங்காயம் (விதைக்காக மட்டும்) கிடைக்கும், ஏன் விதைக்காக மட்டும் கிடைக்கும் என பதிவிட்டு இருக்கிறோம் என்று கேட்டால் அனைவரும் வீட்டில் அழகுக்காக ஏதோ ஒரு செடியை தொட்டியில் வைத்து வளர்ப்போம் அதேபோல் இந்தப் பாரம்பரிய விதைகளையும் ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கலாமே என்ற எண்ணத்தில்தான். (இது விவசாயம் செய்ய எண்ணம் இருந்தும் அதற்கான வயல் இல்லாமலோ அல்லது வாய்ப்பில்லாமலோ ஏங்கும் அன்பர்களுக்காக மட்டுமே).
தொடர்புக்கு: பெருமாள் - 94433 39126.