சுகாதார பணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்கள் மற்றும் மழைகாலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து தகவல்,
தமிழக அரசின் ஆணையின் படி பொதுமக்கள் தங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழை நீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவகூடும்.
எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும் எனவும், பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும்.
டயர்கள். பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும்.
நமது மாவட்டத்தில் பருவமழை தொடங்கி மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் பொது மக்களுக்கு பருவமழையின் பொழுது ஏற்படும் வயிற்றுப்போக்கு, டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, லெப்டோபைரோஸிஸ் போன்ற நோய் தொற்றுகள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில்லுள்ள தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாடமடும் மருத்துவ முகாம் வாகனங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியான அபேட் மருந்து தெளித்தல் மற்றும் கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுவதற்கு 32 சிறப்பு நடமாடும் வாகனங்கள் மற்றும் புகை மருந்து அடிக்கும் 120 Hand Fog இயந்திரங்கள், 40 Pulse Fog இயந்திரங்கள் மற்றும் 12 புகை மருந்து அடிக்கும் வாகனங்கள் ஆகியவைகள் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.
சுகாதார பணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எனவே, வீடு வீடாக செல்லும் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், காய்ச்சல் கண்ட நபர்கள் எவரேனும் அறிகுறியுடன் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் நம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் /(வளர்ச்சி)மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மருவைத்திநாதன், இரா., துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. சௌண்டம்மாள்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம்.பி.சுப்பிரமணி, திரு.பி.என்.பி.இன்பசேகரன் உட்பட இன்னால், முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.