கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, கடத்தூர் கிளை நூலகத்தின் வைர விழா என முப்பெரும் விழா இன்று தொடங்கி இருபதாம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று (14.11.2021) நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் பொறியாளர் ஜெ.கிஷோர்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.கௌரிசங்கர், பொம்மிடி முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இது ஒன்றும் கதை அல்ல நூலை கூத்தப்பாடி மா.பழனி, என் அன்பிற்கினிய நூலை புலவர் நெடுமிடல், கலை விரும்பி கவிதைகள் என்னும் நூலை கோ. மகாலிங்கம் ஆகியோர் அறிமுகம் செய்தனர். நிறைவாக நூலாசிரியர்கள் கே. ஆர். அப்பாவு, கு. ஜெயமணி, கலை விரும்பி ஆகியோர் ஏற்புரை வழங்கினார். பாவலர் கோ மலர்வண்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக கடத்தூர் கிளை நூலக நூலகர் சி.சரவணன் வரவேற்பு வழங்கினார். முடிவில் க.சொக்கநாதன் நன்றி கூறினார்.
.gif)
