அதிஉயர் சிறப்பு மருத்துவமனை மையத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கையும் இத்துடன் சமர்பித்து உள்ளதாகவும், மேலும் இவற்றை பிரதம மந்திரி சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறுகிறார்.
ஒரு மருத்துவராக இத்திட்டம் நிறைவேறினால் சுகாதாரம் பாதுகாப்பில் தருமபுரி மாவட்டத்திற்கு மைல் கல்லாக அமையும் என்று முனைப்பாக கூறுகிறார். அதே போல 102 ஆம்புலன்ஸ் சேவையை கருவுற்ற பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செய்து தர கோரியுள்ளார். இச்சேவையை நிறைவேற்றினால் தாய் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் அறிவியல் பூர்வமாக மருத்துவமனையில் பிரசவிக்கும் முறையை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார்.
102 ஆம்புலன்ஸ் சேவையை எண்ணி பார்கையில், 2008 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் முதலவராக இருந்த போது 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து மிகச் சிறந்த முறையில் இன்று வரை செயல்பட்டு வருவதை எண்ணி நெகிழ்வுற்றார். என தனது அறிக்கையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.S. செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.