தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாவிலைக்கடைகள் திறக்கும் நேரம் மற்றும் நாள் குறித்து "தருமபுரி மாவட்ட வலைத்தளத்தில்" (https://dharmapuri.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நியாயவிலைக்கடைகள் செயல்படும் நாள் மற்றும் நேரம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி வலைதளத்தின் மூலமாகவும் நியாயவிலைக் கடைகள் திறக்கும் நேரம் மற்றும் நாள் குறித்து தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம். மேலும் மேற் கண்ட தேதி மற்றும் நேரங்களில் நியாயவிலைக்கடைகள் செயல்படாத பட்சத்தில் கீழ்கண்ட வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்புக்கொண்டு பயன்பெறலாம்.
தருமபுரி-9445000217, பென்னாகரம்-9445000218, பாலக்கோடு-9445000219, அரூர்-9445000220, பாப்பிரெட்டிப்பட்டி-9445000221, காரிமங்கலம்-9442964557, நல்லம்பள்ளி- 8122010870 மற்றும் மாவட்ட புகார் எண்: 1077 (24*7) தொடர்பு கொள்ளலாம்.
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப. அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.