தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையம் மற்றும் லட்சுமி நாராயணா மகளிர் கலைக்கல்லூரி இணைந்து நடத்திய தூய்மை பாரதம் நிகழ்ச்சியில், தர்மபுரியில் ரயில் நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை மாணவ-மாணவிகள் அகற்றினர்.
இந்நிகழ்வில் தர்மபுரி நேரு யுவகேந்திராவை சார்ந்த பாரத் மற்றும் வேல்முருகன் அவர்கள் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மூர்த்தி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டல் படி மாணவ மாணவிகள் சுமார் 100 பேர் ரயில்நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர், கபில்தேவ் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.