பென்னாகரம் பேரூராட்சியில் எட்டியாம்பட்டி, போடூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக 50 ஆம் ஆண்டு பொன்விழா முன்னால் பேரூராட்சித் தலைவர், பென்னாகரம் நகர கழக செயலாளர் பி.எம். சுப்பிரமணியன் தலைமையில் நகர துனை செயலாளர் எஸ்.பாரிவேந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
நகர செயலாளர் பி.எம்.சுப்பிரமணியன் அவர்கள் கழக கொடியினை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரை யாற்றினார். இந்நிகழ்வில் நகர கழக நிர்வாகிகள் இ.ஆர்.ராமநாதன், ஆர்.ராமச்சந்திரன், இ.சி.கணேசன்,பி.வி.ராஜ்குமார்,லட்சுமி, முனுசாமி,ஜானகிராமன், ரமேஷ்,மாதையன், ராஜேந்திரன், கிரிவாசன்,கண்ணன்,லட்சுமையன், முனியப்பன்,அதியமான், அண்ணாதுரை, மற்றும் வார்டு செயலாளர்கள், பொருப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- செய்தியாளர் இர்பான்.