இந்நிலையில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் கடந்த 7- ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி செய்து வருகிறோம். கரோணா காலகட்டத்தில் கூட ஒரு கிலோ ரூ. 20 முதல் ரூ 30- வரை விற்பனை ஆனது.தற்போது கிலோ ரூ. 8 முதல் 10 ரூபாய் வரை வியாபாரிகள் கேட்கின்றனர்.
தற்பொழுது ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னை. ஓசூர் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது கரோணா பாதிப்பு கேரள மாநிலத்தில் உள்ளதால் காய்கறிகள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் விலை குறைந்து காணப்படுகிறது ஒரு ஏக்கருக்கு செய்த செலவு கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.