புலிகரை அருகே இன்று(17.10.2021) மாலை சுமார் 6.00 மணி அளவில் தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பாலக்கோட்டில் இருந்து தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தொட்டம்பட்டியை சார்ந்த அருள் (25), கொட்டாம்பட்டியை சார்ந்த சரவணன்(27), பனங்காடு பகுதியை சார்ந்த செல்வகுமார்(26) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்த மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- செய்தியாளர் சிங்காரவேலன்.