கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த 67 வயது ஆண் 05.10.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் கொரோனா தொற்று காரணமாக 07.10.2021 அன்று அதிகாலை 11.50க்கு உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய RTPCR சோதனையில் 2.0% பாசிட்டிவ் முடிவுகள் அதாவது 2062 1835 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 43,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42,459 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 347 பேர் உயிரிழந்துள்ளனர், 344 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 180 சாதாரண படுகைகளில் 179 சாதாரண படுக்கைகளும், 836 ஆக்ஸிஜன் படுகைகளில் 800 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 145 இதில் 125 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.